Breaking News

இரு பல்கலைக்கழக மாணவர்கள் பலியான சம்பவம் – படங்கள்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவில் இரண்டாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.

கண்டி, பிலிமதலாவை பிரதேசத்தை சேர்ந்த ஒஷானி எரங்கிக்கா பிட்டவல என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் பரவுவதன் காரணமாக ரஜரட்ட பல்கலைக்கழகம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த மாணவி பரீட்சைக்காக சென்ற நிலையில், காய்ச்சல் ஏற்பட்டு பிலிமதலாவையில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ஆண்கள் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் பள்ளிமுனையை சேர்ந்த கியூமன் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் அவர் மருத்துவப்பிரிவின் இறுதியாண்டு மாணவர் எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் நண்பர்கள் விடுமுறைக்குச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் அறைக்குத் திரும்பி வந்து பார்த்த போது அறையில் துர்நாற்றம் வீசியுள்ளது.
அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குறித்த மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

குறித்த மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் போலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …