Breaking News

யாழை சேர்ந்த புலனாய்வு உத்தியோகஸ்தரின் விபரீத முடிவு

தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் தனக்குத்தானே கைத் துப்பா க்கியால் சுட்டு தற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

கல்முனை பொலிஸ் நிலையத்திற்குள் இயங்கும் தேசிய புலனாய்வுத்துறையின் காரியாலயத்தில் கடமையாற்றும் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேரந்த கமல்ராஜ் (21) என்பவரே இவ்வாறு தற்கொ லை செய்துகொண்டவராவார்.

சம்பவதினமான இன்று மாலை 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து (பிஸ்டல்) கைதுப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டு தற்கொ லை செய்து கொண்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த வாரம் தென்மராட்சியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் தென்பகுதி பொலிஸ் நிலையத்தில் தற்கொ லை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *