Breaking News

மாணவ சிறுமிகளை வேட்டையாடிய ஆசிரிய காவாலிக்கு நேர்ந்த கதி

ஆசிரியர் ஒருவரினால் நீண்ட காலமாக மாணவ சிறுமிகள் பலர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ள சம்பவம் ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
ஏறாவூர் பகுதியிலுள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கடந்த வருடம் தரம் 7 இல் கல்வி கற்ற ஒரே வகுப்பை சேர்ந்த மாணவிகள் சிலரே தௌபீக் எனப்படும் ஒரு  ஆசிரியரினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவரது பாலியல் சில்மிசங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல்  ஆசிரியர் ஒருவரின் மகள் தனக்கும் ஏனைய சக மாணவிகளிற்கும் நடக்கும் பாலியல் வன்முறைகளை தனது பெற்றோரிடமும் பாடசாலை அதிபரிடமும் தெரிவித்ததை அடுத்து பொலிசாரின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உடனடியாக விசாரணையில் இறங்கிய பொலிசாரின் தீவிர விசாரணையில் பல மாணவிகள் குறிப்பாக அனைத்து மாணவிகளும் ஏதோ ஒரு வகையில் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவரவே அதனை உறுதிப்படுத்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சில மாணவிகளை அழைத்துச்சென்று சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பெண் நோயியல் , மகப்பேற்று வைத்திய அதிகாரிகளினால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மாணவிகள் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை வைத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு மேலும் பல மாணவிகள் இன்று வைத்திய பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தங்களுக்கு நடந்த கொடுமைக்காக துணிந்து செயற்பட்ட மாணவிகளையும் பெற்றோர்களையும் பாராட்டுகின்றோம்.
இது தொடர்பில் குறித்த ஆசிரியரினால் பாதிக்கப்பட்ட ஏனைய மாணவிகளும் முன் வந்து குறித்த ஆசிரியரை சட்டத்திற்கு முன் நிறுத்த பின்வாங்க கூடாது.