Breaking News

வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமி மற்றும் இளம் யுவதி ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் யுவதிகளை தங்களது வீடுகளில் வைத்துக்கொண்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் முன்னிலையில் இன்று சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தொழில் பெற்றுத்தருவதாக நிலாவெளி பகுதியில் இருந்து அழைத்து வந்து இரண்டு இளம் யுவதிகளையும் தனது வீட்டில் வைத்துக்கொண்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வந்ததாக திருகோணமலையை தலைமையக பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பகுதி கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அதனை சோதனையிட்ட போது இரண்டு இளம் யுவதிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் பிரதான சந்தேக நபரையும், மற்றைய 18 வயதுடைய யுவதியையும் விளக்கமறியலில் வைக்குமாறும் மற்றைய 16 வயது 4 மாதம் உடைய யுவதியை சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளதுடன், இரத்த பரிசோதனைகளை பரிசோதிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை- பூம்புகார் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவர் எனவும், நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயதுடைய யுவதிகள் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை இச்செயற்பாட்டிற்கு உதவி வழங்கியவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், திருகோணமலை தலைமையக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் தெரிவித்துள்ளனர்

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …