Breaking News

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 2 வயது குழந்தை அடித்துக் கொலை

சென்னையில் மனைவியுடன் உல்லாசம் இடையூறாக இருந்த 2 வயது குழந்தையை அடித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
சென்னை அசோக் நகர் அம்பேத்கர் குடிசை பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன் வயது 27. கூலி தொழிலாளி இவரது மனைவி துர்கா . இவர்களுக்கு 2 1/2 வயதில் ராஜமாதா என்கிற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த எல்லப்பன் மனைவி துர்காவுடன் உல்லாசமாக இருந்தார் .
அப்போது குழந்தை அழுததால் துர்கா கணவரிடம் இருந்து விலகி சென்று தனது குழந்தையை தூக்கி மடியில் வைத்து பால் கொடுத்து கொண்டு இருந்தார் மனைவி விலகி சென்றதால் ஆத்திரமடைந்த எல்லப்பன் மனைவி மடியில் இருந்த குழந்தையின் தலையில் ஓங்கி அடித்தார் இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆர் நகர் போலிசார் எல்லப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் உல்லாசம் அனுபவிக்க இடையூறாக இருந்த குழந்தையை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …