Breaking News

திறப்பு விழாவுக்கு தாமதம்.. மூக்கை உடைத்த ரசிகர்கள்.. தேம்பித் தேம்பி அழுத நடிகை!! வைரல் வீடியோ

ஒரு அடர் லவ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நூரின் ஷெரீப். இந்த படத்தின் மூலம் பிரபலமானதைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி என்ற இடத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றைத் திறப்பதற்கான விருந்தாளியாக நூரின் ஷெரீப் அழைத்து வரப்பட்டார். 4 மணிக்கு வரவேண்டிய ஷெரிப் தாமதமாக வந்ததால் கோபம் அடைந்த ரசிகர்கள் அவரது காரை சுற்றி வளைத்தனர்.
மேலும் கூட்டம் அதிகமானபோது எதிர்பாராவிதமாக ரசிகர் ஒருவரின் கை பலமாக நூரின் ஷெரீப்-ன் மூக்கில் பட்டு பொல பொலவென ரத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது.
இதனால் மேடைக்கு சிறு குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுது கொண்டே சென்ற நூரின் ஷெரீப்-ன் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
வீடியோ :