இரவு முழுக்க செல்போனை பார்த்துவிட்டு காலை லேட்டாக எழுந்துவிட்டோமோ! நாஸ்தாவிற்கு என்ன சமைக்க என குழம்பி கொண்டிருக்கும் தாய்மார்களுக்காக இந்த பதிவு
1. கெட்டி அவலை நீரில் அலசி பின்னர் தேவையான அளவு தயிரில் கலந்து உப்பு மாதுளை முந்திரி தாளித்த பருப்பு இவற்றை சேர்த்தால் பிரமாதமான அவல் தயிர் சாதம் ரெடி.
2. அடுத்து எள்ளுசாதம் தேவையான அளவு எள்ளுப்பொடி கொஞ்சம் அரைக்காத எள்ளு இவற்றுடன் தேவையான அளவு அவல் அல்லது சாப்பாடு இவற்றுடன் மஞ்சள் பொடி மிளகுப்பொடி, உப்பு சேர்த்த பின்னர் தாளிதம் சேர்த்தால் சுவையான எள்ளு சாப்பாடு ரெடி.
3. இவற்றை தவிர சிறு தானியங்களை கொண்டு கஞ்சி வைத்து குடிக்கலாம். நீரை நன்றாக கொதிக்கவைத்து அவற்றுடன் சிறுதானியங்களை கலந்து அதனுடன் வெங்காயம் பூண்டு சீரகம் தேவையான அளவு உப்பு போட்டு குடிக்கலாம். வயிறு நிறைந்த திருப்தியும் கிடைக்கும் அதேநேரம் ஆரோக்கியம் நிறைந்த உணவு.
4. அடுத்து அவலுடன் சூடான பால் கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும். பின் இதனுடன் தேங்காய் துருவல், தேவையான அளவு வெல்லம் கலந்தால் இனிப்பான அவல் ரெசிபி ரெடி.
5. உங்களது சமையல்கட்டில் வேர்மீசல்லி என்றழைக்கப்படும் வறுத்த சேமியாவை தயாராக வைத்திருங்கள். நிமிடத்தில் தக்காளி சேவாய் மற்றும் எழுமிச்சை சேவாய் செய்து அசத்தலாம்.
simplerecipes: இங்கு பட்டியலிடப்பட்டுள்ள உணவுகள் இன்ஸ்டன்டாக எட்டு நிமிடத்திற்குள் செய்யக்கூடிய எளிமையான உணவுகள். நீங்க புதிதாக சமையல் பழகுபவர் என்றால் அவசரத்திற்கு சமைக்க இந்த பதிவை ஒரு கண்ணோட்டம் பார்த்துக்கொள்ளலாம்.