Breaking News

உங்க மொபைலில் இந்த செயலி இருந்தால் யோசிக்காமல் தூக்கிடுங்க! அனுமதி இல்லாமல் கோப்புகளை அக்சஸ் செய்யுமாம்!

கிட்டத்தட்ட நாம் பயன்படுத்தும் பெரும்பாலான செயலிகள் நமது செல்போன் பக்கமே சேர்க்க கூடாதவை. ஸ்மார்ட் போன் பயன்படுத்த ஆரம்பித்த காலகட்டத்தில், எந்த செயலியை இன்ஸ்டால் செய்தாலும் அது கேட்கும் ஒரு சில தகவல்களை நிராகரிக்க முடியும்.

ஆனால் இப்போது எந்த செயலியாக இருந்தாலும் ‘அலோ ஆப்ஷன்’ அதாவது அனுமதி ஆப்ஷன் கொடுக்காவிடின் செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடிவதில்லை. இதெல்லாம் ஒரு பக்கம் தொழில்நுட்ப திருட்டாக இருந்தால், மறுபக்கம் இவற்றை பயன்படுத்தும் போது, ஏற்படும் சிக்கல்கள் தனிலிஸ்ட்.

உதாரணத்திற்கு TikTok செயலி எடுத்துக்கொள்வோம். நாம் பதிவேற்றம் செய்யும் எந்த வீடியோவிற்கும் உரிமம் கிடையாது. யார் வேண்டுமானாலும், நீங்கள் செய்த காணொளியை பதிவிறக்கம் செய்து தவறாக பயன்படுத்தலாம்.

அதுவும் தவறாக, முகநூலில் உள்ள ஆபாச பக்கம் மற்றும் தளங்களில் பதிவிட்ட காணொளிகளை விரைவில் காணலாம். TikTok இல் உள்ள இன்னொரு நன்மை, இங்கு #Edutok என தேடினால் Educational Content Videos களை நிறைய பார்க்க முடியும்.

ஆனால் TikTok இன் நன்மை பலருக்கு தெரியாமல் உள்ளது. அடுத்து B612 – இந்த செயலி அனுமதி இல்லாமல் போனின் கேமராவை இயக்குவதாக நிறைய புகார்களை சுற்றுவட்டாரத்தில் கேள்விப்பட நேர்கிறது.

Zoom App போன்ற செயலிகள் ஊரடங்கு நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 100 நபர்கள் இணைந்திருந்தாலும் பாடம் எடுக்க எளிமையாக இருக்கும். ஓவர் நைட்டில் ஒபாமா அளவிற்கு புகழ்பெற்றதால் என்னவோ ஹேக்கர்ஸ் வந்துவிட்டார்கள்.

அடுத்து நமது எல்லோரது போனிலும் இடம்பெற்றுள்ள செயலி share it. ஆரம்பத்தில் இது விளம்பரம் இன்றி செயல்பட்டது. இப்போது இதில் தேவையற்ற 18+ விளம்பரங்களை பார்க்க முடிகிறது. இதற்கு மாற்றாக goole file பயன்படுத்தலாம். share it விட பலமடங்கு வேகம் மற்றும் ப்ரைவேசியும் கூட.

தொழில்நுட்பம் வளர வளர நாமும் சூதானமாக அப்டேட் ஆகி கொண்டே இருக்கவேண்டும். பயன்படுத்தும் செயலியில் பிரச்சனை இருந்தால், அதற்கு மாற்றாக மற்றொன்றை தேட வேண்டியது மட்டுமே நுகர்வோராகிய நமது கடமை.

இறுதியாக, பிலே ஸ்டோரிலும் ரேட்டிங் குறைவானதாக (நான்கிற்கு கீழ்) உள்ள செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்த்து விடலாம். புகைப்படம் எடுக்க உதவும் செயலிக்கு எதற்கு இருப்பிட அனுமதி? கான்டேக்ட் அனுமதி? சொல்லுங்க! ஆக, நம்ம நேரத்தை விரயம் செய்யும் எந்த செயலிகளாக இருந்தாலும் தூக்கிட வேண்டியது தான்.

About kalaiselvi

Check Also

அதிக நேரம் காலை தொங்கப்போட்டு உட்கார்ந்தால் என்ன ஆகும்? இதோ தெரிந்து கொள்ளுங்கள்

ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் எட்டு மணி நேரம் ஒரே இடத்தில், காலை தொங்கப்போட்டு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *