Breaking News

ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க பரம்பரை பணக்காரனாக இருக்க வேண்டுமா? இவ்வளவு அப்பாவியா இருந்துட்டமே!

மாருதி 800 வாங்கினால், அடுத்து ஸ்விப்ட் வாங்க தோணும், ஸ்விப்ட் வாங்கினால் எஸ்-கிராஸ் வாங்க தோணும், இப்படி கார் வாங்குவதில் மட்டும் மனது திருப்தியே அடையாது.

இப்படி எல்லா கார் பிரியர்களின் உச்ச இலக்காக இருப்பது, ரோல்ஸ் ராய்ஸ். 116 ஆண்டுகால வரலாற்றைக்கொண்ட இந்நிறுவனம், கார் உற்பத்தி துறையில் இன்றளவும் அசைக்க முடியாத ஜாம்பவனாக முன்னிற்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க வேண்டும் என்றால், நீ பரம்பரை பணக்காரணமாக இருக்கும் வேண்டும் என்று சிறு வயதில் நண்பன் சொல்லி கேட்டிருக்கிறேன். இன்றளவும் அதனை உண்மை என்று நினைப்பவர்கள் ஏராளம் உண்டு.

இத்தகைய ஒரு விலை உயர்ந்த காரை வாங்குவதற்கு, நாம் பொருளாதார ரீதியாக தகுதி படைத்தவர் என்பதை தெரிந்து கொள்ள மட்டுமே, தேவையான ஆவணங்கள் கேட்கப்படும்.

மற்றபடி, யார் வேண்டுமானாலும் வாங்கலாம். என்ன விலைதான் சற்று ஏறக்குறைய, ஒரு சிறிய சொகுசு விமானத்தை வாங்குவதை போன்றது. ஒரு அட்டகாசமான ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாய் முதல் 50 கோடி வரை இருக்கும்.

அதிக விலை கொண்ட டாப் மாடல்களுக்கு நீங்கள் விரும்பும் கலரில் உள் அலங்காரம் செய்து தருவார்கள். ஆப்சனலாக நீங்கள் கேட்கும் வசதிகள் செய்து தருவார்கள். உங்களை தயாரிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று உங்கள் விருப்பங்களை உடனே செய்து தருவார்கள்.

கடந்த 116 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்து ஆண்டு விற்பனையில் வளர்ச்சி அடைந்துள்ளது ரோல்ஸ் ராய்ஸ். 2018ம் ஆண்டை விட, கடந்தாண்டில் 250 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் தயாரிக்கும் கார்களுக்கான சந்தை மதிப்பு எவ்வளவாக இருந்தாலும், அதனை அனைவராலும் அவ்வளவு சீக்கிரம் வாங்கிட முடியாது. ரோல்ஸ் ராய்ஸ் கார்களை சொந்தமாக வாங்குவதற்கு என்று சில வழிமுறைகளை அந்நிறுவனம் வகுத்துள்ளது.

நம்மிடம் பணம் இருக்கிறது, நாளைக்கே வாங்கலாம் என்று முடிவு செய்தாலும், அந்நிறுவனம் தான் வாடிக்கையாளரை தேர்வு செய்யும். இதனை வாங்க பெரும் பணக்காரர்களே தவம் கிடக்கின்ற நிலையில், பலருடைய விண்ணப்பங்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

அதிக நேரம் காலை தொங்கப்போட்டு உட்கார்ந்தால் என்ன ஆகும்? இதோ தெரிந்து கொள்ளுங்கள்

ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் எட்டு மணி நேரம் ஒரே இடத்தில், காலை தொங்கப்போட்டு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *