Breaking News

பாம்பு தீண்டியதால் பரிதாபமாக பலியான 5வயது சிறுவன்!! ஆபத்தின் மத்தியில் அல்லலுறும் குடும்பம்

வவுனியாவில் கடந்த 20 ஆம் திகதி தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 5 வயதான சுரேன் சுஜனை பாம்பு தீண்டியுள்ளது.
இந்நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
பாவற்குளம் முதலாம் யுனிற் பகுதியிலேயே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
எதுவித உதவிகளும் இன்றி மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்த அந்த குடும்பத்தில் முன்பள்ளியில் படித்து வந்த ஐந்து வயது மூத்த பிள்ளையே இவ்வாறும் உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் கூலித்தொழில் செய்யும் தந்தை மகனை இழந்த சோகத்தில் வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றன. தமக்குதரப்பட்ட காணியில்வீட்டுத்திட்டம் தரப்படவில்லை என அரச அதிகாரிகளை திட்டித்தீர்க்கும் தாய்.
மனித வசிப்பிடம் என கூற முடியாத அவர்களின் வசிப்பிடத்தில் ஏனைய இரு பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக ஏங்கும் அந்த குடும்பத்தின் துயர நிலையை யார் அறிந்துகொள்ளவார்.
பாதுகாப்பற்ற வசிபிடம் என்பதனால தான் தங்கள் குழந்தை பாம்பு தீண்டி இறந்து விட்டதாக சிறுவனின் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களின் நிலமையினை கருத்தில்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொண்டு ஆவண செய்யுமாறு சமூக ஆர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்