Breaking News

ஆசிரியையை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 16 வயது மாணவன் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தின் குமரி மாவட்டத்தில், டியூசன் ஆசிரியையிடம் 11ஆம் வகுப்பு மாணவன் தகாத முறையில் நடக்க முயற்சித்ததுடன், கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஷானி(25). இவர் பி.எட் படித்துவிட்டு, தனது வீட்டில் மாணவ, மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வருகிறார்.
இதே பகுதியைச் சேர்ந்த ஜெபமணி என்பவரின் மகன் ஜெனிஸ்(16) என்ற 11ஆம் வகுப்பு மாணவனும், மெர்லினிடம் டியூசன் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்றைய தினம் மெர்லினின் வீட்டிற்கு சென்ற ஜெனிஸ், திடீரென்று அவரிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனை எதிர்பார்க்காத மெர்லின் அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளார். இதனால் பதற்றமான மாணவன் ஜெனிஸ், தன்கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மெர்லினின் உடலில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.
ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தலைமறைவாகியுள்ள ஜெனிஸ் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார், அவரை தேடி வருகின்றனர். டியூசன் ஆசிரியையை மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …