Breaking News

ஓடும் பேருந்தில் சாரதிக்கு ஏற்பட்ட விபரீதம்!! மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபட்ட பேருந்து ஒன்று பாரிய விபத்தில் இருந்து நொடிப்பொழுதில் தப்பிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்தது போது சாரதிக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக நடத்துனரை இரண்டு முறை அழைத்துள்ளார். எனினும் நடத்துனருக்கு சத்தம் கேட்காத நிலையில் பேருந்தில் இருந்த பயணி ஒருவரை நடத்துனரை அழைத்துள்ளார்.
நடத்துனரிடம் தகவல் செல்வதற்கு முன்னர், பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த சாரதி “அண்ணா…” என கூறிக் கொண்டே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதன் போது பேருந்தில் இருந்த பயணி ஒருவர் யாராவது பேருந்தை நிறுத்துங்கள் என கூச்சலிட்டுள்ளார். உடனடியாக சில பயணிகள் இணைந்து ஓடிக் கொண்டிருந்த பேருந்தை நிறுத்தியுள்ளனர்.
பேருந்தை யாராவது நிறுத்தவில்லை என்றால் அதில் பயணித்த அனைவருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என சம்பவத்தின் போது பேருந்தில் பயணி ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
மயங்கி விழுந்த சாரதியை, பயணிகள் இணைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

About kalaiselvi

Check Also

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் …