Breaking News

பொது இடத்தில் கூச்சப்படாம சிரிக்க வேண்டுமா? ஒரு வாழைப்பழத் தோல் போதுமாம்!

பற்கள் சரியாக இல்லை என்றால் பொது இடத்தில் சிரிக்கவே கூச்சமாக இருக்கும். எனக்கு முன் பற்கள் இரண்டுக்கும் இடையில் இடைவெளி இருக்கும். ஸ்கூல் படிக்கும் போது எல்லாம் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.

இப்போ இடைவெளி கொஞ்சம் அதிமாகிவிட்டதால் நாலு பேர் சுற்றி இருக்கும் இடத்தில் இயல்பாக சிரிக்க முடிவதில்லை. இதே வீடாக இருந்தால் வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பு வரும் கண்ட்ரோலே பண்ண முடியாது. அடுத்து கிளிப் போடலாமா? இல்லை செராமிக் கொண்டு இடைவெளியை அடைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

இதே போலத்தான், பற்களில் மஞ்சள் நிற காரை படிந்தவர்கள் நிலைமையும். வயதாக வயதாக பற்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறுவது இயல்பு. ஏனென்றால், பற்களை தேய்த்துக்கொண்டே இருக்கும் போது மேலே உள்ள எனாமல் கோட்டிங் தேய்ந்து மஞ்சளாகி விடும்.

அதனால் தான் குழந்தைகளுக்கு பற்கள் வெள்ளை நிறத்திலும் வயதானவர்களுக்கு மஞ்சள் நிறத்திலும் இருப்பதை பார்த்திருக்க முடியும். இதில் இன்னொன்றும் சொல்ல வேண்டி இருக்கு.

மஞ்சள் நிற பற்களையும், பல் காரையையும் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. வயதாக வயதாக பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்க முடியாது. ஆனால் காரை படிந்து பற்கள் மஞ்சள் நிறமாக மாறியதை எளிதாக நீக்க முடியும்.

வாழைப்பழத்தை சாப்பிட்டு தூக்கி எறியும் வாழைப்பழத்தோலின் வெள்ளையான பகுதியை அடிக்கடி தேய்த்து வந்தால் காரை படிந்த மஞ்சள் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். ஒரு சிலருக்கு ரொம்ப காரை படிந்திருக்கும். அதுக்கும் வழி இருக்கு.

அதற்கு பல் மருத்துவரிடம் சென்று ஸ்கேலிங் செய்ய வேண்டும். சிறிய இயந்திரத்தை கொண்டு பற்களுக்கு மேல் உள்ள படிவை நீக்கி விடுவார்கள். இன்டர்நெட்டில் பார்த்தேன் என்று சொல்லி சோடா, எலுமிச்சை கலந்து பற்கள் மீது தேய்த்தால், எனாமல் தேய்ந்துவிடும்.

அப்படி செய்யக்கூடாது. அதனையும் மீறி முயற்சி செய்து பார்த்தால் பல நாட்கள் பற்கூச்சத்தால் அவதிப்பட வேண்டிவரும். நமக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்தால் எந்த தொந்தரவும் வராது.

About kalaiselvi

Check Also

இரவில் தூங்கமால் பகல் நேரங்களில் தூங்குவதால் ஏற்படும் தீ மை கள் என்னென்ன?

நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேலை தூங்கும் விதமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. இரவில் 6 முதல் 8 மணி நேரம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *