Breaking News

பிகில் ரிலீஸ்!! யாழில் ரசிகர்களின் அட்டகாசத்தினால் சூறையாடப்பட்ட திரையரங்கம் – படங்கள்

இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியையொட்டி இன்று ஒரு நாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பிகில் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு அரசிடம் அனுமதி கேட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி முதல் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இலங்கையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் தியேட்டரையே விஜய் ரசிகர்கள் சூறையாடியுள்ளனர்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்கில் “பிகில்” திரைப்படம் திரையிடப்படவுள்ள நிலையில், அதிகாலையே வந்த விஜய் ரசிகர்கள் பலர் தங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போன விரக்தியில் திரையரங்கை அடித்து சேதப்படுத்தினர். மேலும், திரையரங்கினுள் புகுந்து ஸ்க்ரீனையும் சேதப்படுத்திய அவர்கள் கேட்டை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். திரையரங்கு ஊழியர்களும் தாக்கபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தியேட்டார் நிர்வாக தரப்பில் இருந்து கூறியதாக தகவல்கள் வந்துள்ளன.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …