Breaking News

அப்பாடா பினான்ஸ்காரன் வாகனத்தைப் பறிச்சுக்கொண்டு போய்ற்றான்!! நிம்மதியாயிருக்கலாம்

சமூக அந்தஸ்து மட்டத்தை பேணுவதற்காக மற்றவரைப்போல , தானும் ஒரு புதிய காரை வாங்க நினைக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாதச் சம்பளக்கார் ஒருவர் பினான்ஸ் கம்பனியின் ஆசை வார்த்தைக்கு மயங்கி ஒரு காரை பினான்ஸில் வாங்குகிறார்.

௹ 25 இலட்சம் பெறுமதியான காரை வாங்குகிறார். 4 வருடங்களில் கட்டி முடிவதாயின் அந்தக்காரின் பெறுமதி ௹.40 இலட்சம் அந்தப் பெறுமதிக்கு ‘அக்கறிமண்ட்’ அடிக்கப்படும்

“வா மச்சான் சின்னவொரு ‘சைன்’ ஒன்று ” என தனது நண்பர்கள் இருவரை கூப்பிடுவார் நமது கதாநாயகன்.

“உனக்கில்லாத சைனா மச்சான்” என மூவரும் குறித்த அக்றிமண்டில் ‘சைன்’ வைப்பார்கள்.

“எப்படிடா மாதா மாதம் தவணைப் பணத்தைக் கட்டுவேன்” என்ற எண்ணம் காரை வாங்குபவனின் ‘ப்ளட் பிரசர்’ பட்டனை ஒன் செய்ய.

“அவசரத்திற்கு எங்கையாலும் போவதென்றால் காரைக்கேட்கலாம் ” என நண்பர்கள் நினைக்க….

பினான்ஸ் கம்பனியின் கிளை மனேஜரோ “ஒரு ௹.50 இலட்சம் பெறுமதியான பணமரத்தை நாட்டியாச்சு இனி அறுவடை ஆரம்பம் “என்ற சந்தோசத்தில் குதித்து, குறித்த தினத்தைக் ‘கேக்’ வெட்டிக் கொண்டாடுவார்.

சில மாதங்களில் மோட்டர் சைக்களில் தனது கணவன் வேலைக்குப்போய் வந்தபோது இருந்த குடும்ப சந்தோசம் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைவதை எமது கதாநாயகனின் மனைவி உணர்வாள்.

கணவன் தனது குடும்பத்துக்காக உழைப்பதுடன் ‘ஏசி றூமில்’ டையைக்கட்டிக்கொண்டு வாழும் இன்னுமொரு குடும்பத்திற்கும் (பினான்ஸ் கம்பனிக்காரர்தான்) சேர்த்து மாடாய் உழைப்பதைக்கண்டு கண்ணீர் விடுவாள்.

மாத சம்பள வேலையுடன் இரவில் ‘ஹயர்’ வேலையும் செய்வதால் ஒழுங்கான தூக்கம் சாப்பாடின்றி நமது கதாநாயகர் நோயாளியாவார்.

தவணைப்பணம் கட்டுவது தாமதமாகும்.இவ்வளவு காலமாக நண்பனாகப் பழகி நடித்த ‘பினான்ஸ் கம்பனி மனேஜர்’ படிப்படியாக எதிரியாக மாறுவார்.

கட்ட வேண்டிய ௹.40 இலட்சங்களில் ௹.25 இலட்சம் எமது கதாநாயகன் கம்பனிக்கு கஷ்டப்பட்டுக் கட்டியிருப்பார்.

தவணைக்கட்டணத்துடன் தாமதக்கட்டணத்தையும் சேர்த்துக் கட்டும்படி ‘வக்கீல்’ நோட்டிஸ் வரும். அதன் பின்னர் வாகனத்தை ஒப்படைக்கும்படி கம்பனி கேட்கும் ,

‘வாகனத்தை கம்பனியிடம் ஒப்படைத்தால் பிரச்சினையெல்லாம் முடிந்துவிடும்’ என ஆசை காட்டி வாகனத்தை கம்பனி கைப்பற்றி விற்றுவிடும்.

நமது கதாநாயகனோ “அப்பாடா பினான்ஸ்காரன் வாகனத்தைப் பறிச்சிட்டுப்போய்ற்றான் இனிமேல் பினான்ஸ் கட்டத்தேவையில்லை” என நிம்மதிப் பெருமூச்சு விடுவார்.

சில மாதங்களின் பின்னர் மீண்டும் வக்கீல் நோட்டிஸ் வரும் தங்களுக்குக் கிடைக்கவேண்டிய ௹ 7 இலட்சத்தைக்கட்டும்படி அதைக்கண்டு அதிர்ச்சியடையும் நோயாளியான கதாநாயகன் கம்பனி மனேஜருடன் தர்க்கத்திலீடுபடுவார்.

இவரின் ‘ஆர்கியுமண்ட்’

“நான் இதுவரைக்கும் ௹25 இலட்சம் கட்டிட்டேன்; வாகனத்தை ஒரு ௹.20 இலட்சத்துக்கு வித்திட்டீங்க என்று கேள்விப்பட்டேன், ஆகவே உங்களுடைய ௹.40 இலட்ச டாக்கெட் முடிஞ்சுதுதானே” என்பார்,

“எது என்றாலும் ஹெட்ஒபிசுடன் பேசிக்கொள்ளுங்க “என்பார் கிளை மனேஜர். எமது கதாநாயகன் அதைக்கணக்கிலெடுக்காமல் இருந்துவிடுவார்

இவர் ஒன்றும் கட்டத்தேவையில்லைஎன்ற எண்ணத்தில் சில மாதங்கள் கழிய இவருக்கும் இவரது நண்பர்களுக்கும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் 8 க்கு வரும்படி நீதிமன்ற அழைப்பாணை வரும்.

“நோயாளியான நாயகன் மண்டையப் போட்டாப் பிணை வைத்த, தாங்களே குறித்த தொகையைக்கட்ட வேண்டிவரும்” என்பதைக் காலந்தாழ்த்தி அறிந்த பிணைகார நண்பர்களின் மிரட்டல்களுக்குப் பயந்து , எது வந்தாலும் பரவாயில்லை , என ஒரு கொழும்பு லோயரப்பிடித்து மன்றில் தோன்றுவார்கள்.

வழக்காடல் என்ற பேரில் காலத்தைக் கடத்துவதற்கு எல்லோரும் உடந்தையாக இருப்பார்கள். கம்பனி – வட்டிக்காகவும், லோயர் – பீசுக்காகவும் நமது நாயகன் – பினான்ஸ் கம்பனிக்கு ஒரு பாடம் படிப்பிப்பதற்காகவும் காலங் கடத்தப்படும்.

2 வருட காலம் கடந்த பின் “இவர்கட்ட வேண்டிய தொகை ௹ 7 இலட்சமல்ல கடத்தப்பட்ட காலத்துக்கான வட்டி, வழக்குச்செலவுடன் ௹ 10 இலட்சம் கட்டியேயாக வேண்டும்”என கம்பனி ‘லோயர்மார்’ கூறுவார்கள்.

இவர் பிடித்த லோயர் “கம்பனி லோயருடன் பேசி ஒரே தடவையில் ௹.10 இலட்சம் கட்டுவதாயின் ஒரு சிறிய தொகையை கழிக்கச் சொல்லலாம்” என்பார். அவ்வளவுதான் அவரால் செய்யமுடியும்.

“இதை வழக்கு ஆரம்பிக்க முன்னரே சொல்லியிருந்தால் உனக்குத் தந்தத்தையும் சேர்த்து ஒரு 5 இலட்சம் மிச்சம் பிடிச்சிருக்கலாம்” என்று மனதுக்குள் திட்டியது பக்கத்திலிருந்த எனக்கு மாத்திரம் கேட்டதால் தான் இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

இந்த அனுபவத்தை நீங்களும் share செய்து உங்கள் நண்பர்கள் கடனாளியாக மரணிப்பதை தவிர்க்க உதவிசெய்யுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *