Breaking News

இதெல்லாம் உங்க மொபைலில் இருந்தால் உடனே டெலிட் பண்ணுங்க! “அந்தரங்கம்” ஆன்லைனில் கசிகிறது

தொழில்நுட்பம் வளர்ந்த காலத்துல நாம தான் சூதானமா நடந்துக்கனும். இப்போ தான் வாங்கினது என் புது நம்பர், யாருக்குமே கொடுக்கல. ஆன புதுசு புதுசா மார்கெட்டிங் மெசேஜ் வந்துட்டே இருக்கு.

புதுசா ஒரு ஆப் கூகுள் சர்ச் பண்ணி, அதுல இருந்து டவுன்லோட் பண்ண அப்புறம் தான் இந்த பிரச்சனை வந்திருக்கு. பிளே ஸ்டோர்லயே டவுன்லோடு பண்ணிருந்தாலும் சில செயலிகளுக்கு எல்லா அனுமதியும் கொடுக்க கூடாது. புகைப்படம் சார்ந்த செயலிகளுக்கு இருப்பிட அனுமதி தேவையில்லை.

பொதுவா எந்த செயலிக்கும் தேவையில்லாம காண்டாக் அனுமதி, கேமரா அனுமதி கொடுக்காதீங்க. எக்காரணம் கொண்டும் Playstore தவிர, வேறு எதிலும் செயலிகளை தரவிறக்கம் செய்யக்கூடாது. பிளே ஸ்டோரிலேயே டவுன்லோட் செய்திருந்தாலும், மொபைலில் வைக்க கூடாத சில ஆப் குறித்த விவரங்களை அடுத்து பார்க்கலாம்.

1. Truecaller –

இந்த அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொதுவான செயலி. நம்முடைய மொபைலில் இருக்கும் அனைத்து எண்களையும் நகலெடுத்து சர்வரில் சேமித்துக் கொள்ளும். அந்த மொபைல் எண் குறித்த அனைத்து தரவுகளும் அவர்களிடம் இருக்கும். இந்த ஆப் நூதனமாக பயன்பாட்டாளர் தகவல்களை சட்டரீதியாகவே திருடியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. Zoom –

வீடியோ கான்பரன்ஸ்சிங் மிக எளிமையாகவும், தெளிவாகவும் செய்யும் பொருட்டு உருவாக்கபெற்றது. ஆனால் இந்த ஊரடங்கு நேரத்தில் பயனாளர்களின் தரவுகளை, அவர்களுக்கே தெரியாமல் விற்று வந்ததை, இந்திய அரசு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

3. B612 –

இவை நம்முடைய அனுமதியில்லாமல், கேமராவை தானே மறைமுகமாக இயக்குகிறது என கண்டறியப்பட்டுள்ளது. அப்படி நடந்தால் எந்த அளவுக்கு நம்முடைய அந்தரங்கம் கசியும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

4. VPN செயலிகள் –

VPN ஆப்களை பயன்பாடுத்தி ஒரு நபர், அரசால் தடை செய்யப்பட்ட இணையதளங்களை காண முடியும். ஆனால் அந்த நபர் காணும் இணையதளத்தின் தரவை, VPN ஆப் நிறுவனங்கள் BPO-விற்கு விற்று விடுகிறது. அந்த தரவை வைத்து நமக்கு அதற்குதக்க குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.

5. Tik Tok –

இதில் போடப்படும் எந்த ஒரு வீடியோவிற்கும், காப்புரிமை கிடையாது என்பதால், யார் வேண்டுமானாலும் உங்கள் வீடியோக்களை டவுன்லோட் செய்து தவறாக பதிவிடலாம். ஆபாச வலைத்தளங்களின் பார்வையில் டிக் டாக் ஆப் முதலிடத்தில் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

cautions:

இதெல்லாம் தாண்டி, நேரத்த வீணடிக்குற எந்த செயலியும் வைத்துக்கொள்ளக் கூடாது. இந்த உலகத்தில் ஸ்மார்ட் மொபைல் இருக்கும் வரை தனியுரிமை என்பதற்கே இடமில்லை. நாம தான் உஷாரா இருக்கணும்.

இன்னும் இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் 110NEWS இணைய தளத்துடன் இணைந்திருங்கள்.

About kalaiselvi

Check Also

அதிக நேரம் காலை தொங்கப்போட்டு உட்கார்ந்தால் என்ன ஆகும்? இதோ தெரிந்து கொள்ளுங்கள்

ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் எட்டு மணி நேரம் ஒரே இடத்தில், காலை தொங்கப்போட்டு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *