Breaking News

பெற்ற மகளை சீரழித்து கர்ப்பமாக்கிய தந்தை!! மரபணு சோதனையில் மாட்டினார்

உடல் ஊனமுற்ற இளம் பெண்ணொருவர் கர்ப்பம் தரித்த சம்பவம் தொடர்பில் அப்பெண்ணின் தந்தையை மொனராகலைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் கர்ப்பம் தரித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தை பிறிதொரு இளைஞர் மூலம் தனது மகள் கர்ப்பம் தரித்துள்ளார் என, மொனராகலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில், மொனராகலைப் பொலிஸார் குறிப்பிட்ட இளைஞரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கிடைத்த தகவலின்படி பெண்ணின் கர்ப்பம் குறித்து கைது செய்யப்பட்ட இளைஞன், பெண்ணின் தந்தை, பெண்ணின் சகோதரர்கள் இருவர் ஆகியோர் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கடந்த 3 வருடங்களாக நீடித்த குறித்த பரிசோதனைகளின் அறிக்கை மொனராகலைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து பெண்ணின் தந்தையே மகளின் கர்ப்பத்திற்கு காரணமென்று தெரியவந்துள்ளது.
இதையடுத்தே குறித்த பெண்ணின் தந்தை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மரபனு அறிக்கையுடன் மொனராகலை நீதிமன்றில் நீதிமன்றத்தில் முன்னிலையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகப் மொனராகலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …