Breaking News

தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிய நடிகைக்கு இந்த நிலையா?

சென்னை மெரினாவில் கர்சீப் விற்று பிழைப்பு நடத்தி வரும் ரங்கம்மா பாட்டி, நடிகர் சங்கம் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கலக்கு கலக்கியவர் ரங்கம்மா பாட்டி, நகைச்சுவை காட்சிகளில் வடிவேலுவுடன் இணைந்து அட்டகாசம் செய்திருப்பாார்.
தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

இவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் 500 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன், சினிமாவில் சம்பாதித்ததை பிள்ளைகளுக்கே செலவழித்து விட்டேன், தற்போதும் நடிக்க தயாராக இருக்கிறேன், ஆனால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பிள்ளைகளும் கைவிட்டதால் கர்சீப் விற்று வருகிறேன், என் நிலை அறிந்து தமிழக அரசோ, நடிகர் சங்கமோ உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் ரங்கம்மா பாட்டிக்கு நடிகர் சங்கம் சார்பில் ரூ.5000 நிதியுதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது