Breaking News

லொறியொன்று விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே சாரதி உயிரிழப்பு

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதியின், வில்கம் விகாரை பகுதியில் லொறியொன்று விபத்திற்கு இலக்கானதில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காக பயணித்துக்கொண்டிருந்தபோது குறித்த விபத்து இன்று(3) அதிகாலை இடம்பெற்றுள்ளது என ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் கண்டி – கலகெதர பகுதியைச் சேர்ந்த சன்ஜய சதுன் விக்ரமசிங்க (33 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *