Breaking News

கர்ப்பிணித்தாய் பலியான சம்பவம்!! போராட்டத்தில் மக்கள்

நானூயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமர்செட் தோட்ட ஈஸ்டல் பிரிவில் கடந்த மாதம் 31ம் திகதி கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து குறித்த தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்திற்கெதிராகவும் தோட்டா வைத்தியசாலைக்கெதிராகவும் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தோட்ட மக்கள் குறிப்பிடுகின்ற போது உயிரிழந்த குறித்த பெண் தோட்ட வைத்தியசாலையிலேயே மாத பரிசோதனைகளை மேற்கொண்டதோடு குறித்த வைத்தியசாலையில் ஒழுங்கான மருத்துவ வசதி இல்லாத காரணத்தினாலும் கர்ப்பிணி பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தோட்ட நிர்வாகம் தோட்ட லொரியை வழங்காமையினாலுமே குறித்த பெண் உயிரிழந்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டனர்.

எனவே இதற்கான தகுந்த காரணத்தை வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தோட்ட மக்கள் குறிப்பிட்டனர்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *