Breaking News

நோய் நொடி ஏதுமின்றி வாழனுமா? இப்படி வாழ்ந்து பாருங்கள் ! 100 வயது தாண்டியும் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் !

நம் உடலில் பிரச்சனைகள் வந்த பிறகு நாம் அனைவரும் பிரச்சனைக்கான நேரடி நிவாரணிகளை தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பிரச்சனைக்கான ஆணிவேர் நோய் முற்றிலும் குணமடைந்து விடும். என்பதை நாம் சற்றும் நினைத்துப் பார்ப்பதில்லை. முயற்சிப்பதுவும் இல்லை. உடனடி நிவாரணமான ஆங்கில மருந்துகளை நாம் உண்டு இன்னும் வியாதியை அதிகமாக்குகிறோம்.

மேலும் வியாதிகள் வருவதற்கு இரண்டே காரணம் தான். ஒன்று தவறான உணவு முறை மற்றொன்று முறையற்ற வாழ்க்கை முறை.

இவை இரண்டுமே வெவ்வேறாக இருந்தாலும் உடலில் பாதிப்புக்களை விளைவிப்பதில் ஒன்றாகத் தான் தெரியும். இவ்வாறு முறையற்ற நாகரீக வாழ்க்கை முறையால் நாமே நம் வாழ்வை சிக்கலாக்கி வருகிறோம்.

மேலும் நம் வாழ்க்கை முறையின் பாதிப்புக்களை நம் உடல் வலி இல்லாத வகையில் நமக்கு முதலில் உணர்த்தும். அதாவது தலை முடி உதிர்தல், தலை முடி நரைத்தல், உடல் எடை கூடுதல், தோல் வறட்சி, தோல் நோய்கள், வயிறு உப்புசம், வாயு தொல்லை போன்ற நோய்கள் முதலில் ஆரம்பிக்கும்.

மேலும் அடுத்த கட்டம் கொஞ்சம் வெளிப்படையான வலியை காட்டும். தோல் அழற்சி, கொப்புளங்கள், மூட்டு வலிகள், தசை பிடிப்புக்கள், சிறுநீர் வருத்தங்கள், நீரிழிவு, தலை சுற்றல், கண் பார்வை மங்குதல், உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், எலும்பு தேய்மானம் போன்ற நோய் அறிகுறிகளை ஏற்படுத்தும்.

நாம் இதிலும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் அதன் அடுத்த பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.அடிப்படையை மாற்றாமல் எந்த பிரச்சனையையும் மாற்ற முடியாது. வியாதியின் ஆணி வேரை களையுங்கள்.

கடை உணவுகள் துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமாக உணவுகளை உண்ணுங்கள். அதாவது வயிற்றை ஒரு சிறப்பான ஒன்றாக பார்க்க வேண்டும். அதில் எந்த குப்பைகளையும் போடுதல் கூடாது. உள்ளே நாம் எதனை தள்ளுகிறோமோ அதன் பலன் தான் நமக்கு கிடைக்கும். விதைப்பது தரமில்லை என்றால் கிடைப்பதுவும் தரம் குன்றியே இருக்கும்.

நாம் உட்காரும் அளவை குறைத்து கொள்ள வேண்டும். நாள் முழுவதும் சுறுப்பாக இருங்கள். நம் உடலுக்கு மிகவும் அவசியம் நடை பயிற்சி மற்றும் யோகா இரண்டையும் தினமும் செய்யுங்கள்.

இலத்திரேனிய பொருட்களை இரவில் பார்க்காதீர்கள். அதில் உள்ள ஒளிக்கதிர்கள் நம் கண்களை பாதிக்கும். அதே நேரம் கண்ணில் நீர்த்தன்மையை காய வைத்து வறட்சியை ஏற்படுத்தும். இரவில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

தூக்கம் வருகிறதோ இல்லையோ உறங்கச் செல்லுங்கள் நாளடைவில் உறக்கம் வந்து விடும். இயற்கை வாழ்க்கையை வாழக் கத்துக் கொண்டால் என்றும் வாழ்க்கை சிறப்பாக வாழலாம். அதாவது பறவைகளை கவனியுங்கள்.

சூரியனோடு சூரியனாக அதன் வாழ்க்கை இருக்கிறது. சூரியன் மறையும் நேரம் அது உறக்கத்திற்கு செல்கிறது. அதே போல் பறவைகள் அதிகாலையில் எழுந்து விடுகிறது. அவை இடையில் விழிப்பதும் இல்லை கொறிப்பதும் இல்லை.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *