Breaking News

ஆண்களே தவறவிடாதீர்கள்!! சாலையோரம் குப்பையாக வளரும் செடி!! சிறுநீரக வியாதிக்கு அருமையான மருந்து!

சாலை ஓரங்களிலும், விளை நிலங்களிலும் களைச்செடியாக முளைத்திருக்கும் நெருஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

நெருஞ்சி இலையில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. இது பாலியல் பிரச்சினைகளையும், சிறுநீர் கோளாறுகளையும் நீக்குவதற்கு அருமருந்தாக பயன்படுகிறது.

நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் குழந்தை பேறு உண்டாகும்.

ஆண்மை பெருக நெருஞ்சி முள்ளை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி இதில் 2 கிராம் அளவு பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வந்தால் ஆண்மை பெருகும்.

விவசாயிகளுக்கும் பாதங்களுக்கும் எதிரியான நெருஞ்சி முள், சிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும். இரத்த சுத்திக்கும் மட்டுமல்லாமல் சிறுநீர் தடையின்றி போவதற்கும் மருந்து தயாரிக்கப்படுகிறது.

மேலும் சிறுநீர் பாதையில் எரிச்சல் வலி ஏற்பட்டால் நெருஞ்சி செடியுடன் நித்யகல்யாணி பூ சம அளவு எடுத்து நீர் சேர்த்து காய்ச்சி வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்து காலையில் மட்டும் குடித்து வந்தால் எரிச்சல் வலி ஏற்படாது.

நெருஞ்சி முள் 50 கிராம், கொத்தமல்லி 5 கிராம், இரண்டையும் நீருடன் சேர்த்து காய்ச்சி பாதியாக வற்றியதும் வடிகட்டி 60 மில்லி அளவு காலை, மாலை இருவேளை குடித்து வந்தால் கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும்.

நெருஞ்சி விதை, மற்றும் வெள்ளரி விதை இவை இரண்டையும் சம அளவு எடுத்து பொடிசெய்து அதில் 2 கிராம் அளவு எடுத்து இளநீரில் கலந்து உட்கொண்டு வந்தால் கல் அடைப்பு நோய் குணமாகும்.

கண் எரிச்சல் குணமடையும் உடல் சூடு காரணமாக சிலருக்கு கண் எரிச்சல் ஏற்படும். அவர்கள் நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அதை மண் சட்டியிலிட்டு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல், உடல் உஷ்ணம் போன்றவை குணமாகும்.

மேலும் மஞ்சள் காமாலைக்கு நிவாரணம்: நெருஞ்சி வேர் கீழாநெல்லி வேர் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து இளநீரில் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை நோய் தணியும். இதனை அரைத்துச் சாறு பிழிந்து குடித்தால் சிறுநீருடன் இரத்தம் கசிவது நிற்கும்.

எண்ணெய் போல் பிசுபிசுப்பு ஆகிவிடும் .இதுவும் ஒரு மருந்து ,இது காமவர்த்தினி .ஆண்மை பெருக்கி மேலும் இது பட்டுத்துணிகளைச் சுத்தப்படுத்தும்.யானை நெருஞ்சலைப் பிடுங்கி நீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு, கறை அகலும். இது எந்த ரசாயனமும் இல்லாமல் இயற்கை முறையில் பட்டு முதலிய துணிவகைகளை சுத்தம் செய்து கரைகளை எடுக்கும் .ஒரு பயோ சலவையகம் கூட துவக்கலாம்.

சிறு நெருஞ்சில் பசுமையான புல் தரைகளிலும், மற்ற இடங்களிலும் தரையோடு தரையாக படர்ந்து வளரும். இதனுடைய இலைகள் பார்ப்பதற்கு புளிய இலைகள் போல் இருக்கும். ஆனால் அவற்றை விட சிறிய அளவிலும், பூக்கள் ஐந்து இதழ்களிடன் மஞ்சள் நிறமாக சிறியதாகவும் இருக்கும்.

பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும் இவை குணத்தில் மாறுபடுவதில்லை. இதன் இனப்பெருக்கம் விதைமூலம் செய்யப்படுகிறது. இது குளிர்ச்சி உண்டாக்கி , சிறுநீர் பெருக்கி , உரமாக்கி , உள்ளழலகதறி , ஆண்மைப்பெருக்கி, நாம் உண்ணும் உணவின் சாரத்தின் பகுதி சிறு நீரகத்தில் நீராக பிரிக்கப்பட்டு சிறுநீராய் வெளியாகிறது. இந்நீரில் பல வகைப்பட்ட உப்புகள் நிறைந்திருக்கின்றன. இவ்வுப்புகள் சில வேளை சிறுநீரகத்தில் தங்கி உறைந்து பெருத்து வளர்கிறது. இதுவே கல்லடைப்பு நோயாகும்.

நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது. உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது.

ஆனை நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல். இவைகளை தரும் . சாப்பிட்டுப்பார்த்தால் தான் தெரியும் அதன் வலிமை. நம்மிடையே இருக்கும் ஆண்மை பெருக்கி மருந்துகள் பல இன்னும் சரிவர பயன்படுத்தாமல் இருக்கிறது .நெருஞ்சல் வித்தினைப் பாலில் புட்டவியல் செய்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும்.

நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும்.

சிறு நெருஞ்சில் இலைகளைப் பறித்து வந்து, அதில் அரை லிட்டர் அளவு சாறெடுக்கவும். கீழாநெல்லி இலைகளைப் பறித்து அதிலும் அரை லிட்டர் சாறெடுக்கவும். இரண்டையும் ஒன்றாய்க் கலந்து, இதில் கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

இதில் கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல் சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி சிறுநீரகம் செழுமையாய் செயற்படும். டயாலிசிஸ் செய்தது லக்ஷக்கணக்கில் பணத்தையும் உடல் நலத்தையும் இழக்கவேண்டாம்.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *