Breaking News

55 வயதில் 25 வயதின் சுறுசுறுப்பு!! உடனே இதை பறித்து சாப்பிடுங்கள்.. மிகவும் சக்தி வாய்ந்தது

மணத்தக்காளி கீரை சுக்குட்டி கீரை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த செடியின் கீரை, தண்டு, காய் ஆகிய அனைத்தும் சமையலிலும், மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேற்கு ஆப்ரிக்காவில் தோன்றிய இந்த கீரையின் விஞ்ஞான பெயர், ஸோலனம் நைக்ரம் என்பதாகும். மணத்தக்காளி கீரையின் முக்கிய மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காண்போம்.

மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.

சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு மட்டுமல்லாமல் இருமல், இரைப்பு போன்றவைகளுக்கு குணம் தரும்.

மேலும் இந்தக் கீரையை சாப்பிடுவதால் வாயிலும், வயிற்றிலும் உண்டாகும். புண்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.

மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வலிமை பெறும்.

மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். அதுமட்டுமல்லாமல் சிறுநீரை வெளியேற்றி தேகம் குளிர்ச்சியாகும்.

மணத்தக்காளி கீரைகளை தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்குவதால் வாய்ப்புண், மற்றும் வயிற்றில் உள்ள புண்கள் குணமடையும். இதே போல் ஒரு நாளைக்கு 5 முதல் 6 இலைகளை பச்சையாக மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும்.

மணத்தக்காளி இலை சாற்றை 5 தேக்கரண்டி அளவில் தினமும் மூன்று வேளைகள் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

நாக்குப்புண், குடல்புண் குணமாக மணத்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது.

நாக்கு சுவையின்மை, வாந்தி உணர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை மணத்தக்காளி வத்தலுக்கு உள்ளது. அதனால் கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில் தினமும் இந்த வத்தலை உணவுடன் சேர்த்துக் சாப்பிட்டு வரலாம்.

மேலும் மார்பு சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணத்தக்காளி வத்தல் பயன்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் மணத்தக்காளி வத்தல் கிடைக்கும்.

மணத்தக்காளி கீரையின் பழம் புதுமணத்தம்பதிகள் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. மஞ்சள் காமாலை, கல்லீரல் தொடர்பான நோய்களை குணப்படுத்த மணத்தக்காளியின் பழம் மற்றும் கீரைகளை வேகவைத்து அதன் சாற்றை பருகுகின்றனர்.

தோலில் ஏற்படும் அலர்ஜி, வெயிலுக்கு ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு போன்றவற்றை குணப்படுத்த மணத்தக்காளி கீரையை சாறாக பிழிந்து அதன்மேல் தடவலாம். மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் உடலின் அழகு கூடும்.

இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது.

இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் சாப்பிட்டால் களைப்பு நீங்கும். இத்துடன் நன்கு தூக்கத்தையும் கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.

இக்கீரையையும், பழத்தின் விதைகளையும் காய வைத்துப் பொடியாக்க வேண்டும். அவற்றைத் தலா அதைக் கரண்டி வீதம் காலையும், மாலையும் உட்கொண்டால் நெஞ்சுவலி குணமாகும்.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *