Breaking News

எப்படிப்பட்ட சிறுநீரகக் கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் அற்புதமான பழம் இதோ

நார்த்தம்பழம் உடல்சூடு தணிக்கும். நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது.

இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும்.

சிறுநீரகக் கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் பழம். நார்த்தம்பழம் புளிப்புச் சுவையுடையது. இது ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றைப் போன்றே காணப்படும். சிட்ரஸ் பழ வகையைச் சார்ந்தது.

மேலும் இப்பழத்தில் அளவிட்டு சொல்ல முடியாத அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், மக்னீசியம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் போன்றவை நிறைந்து காணப்படுகின்றன.

மேலும் இவை சர்க்கரையை குறைத்து கொலஸ்ட்ராலைக் குறைத்து உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. இது எலுமிச்சையைப் போன்று கொஞ்சம் பெரிய சைஸில் இருக்கும்.

கிட்டதட்ட 15 முதல் 20 அடி உயரம் வரை இம்மரம் வளரக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்த மரம் ஒரு புதர் வடிவ அமைப்பைக் கொண்டிருக்கும்.

மேலும் இதில் ஏராளமான தாது உப்புக்களும், வைட்மின்களும் நிறைந்து காணப்படுகின்றன. தினமும் சிறிதளவு இந்த பழத்தை நாம் எடுத்துக் கொள்வதால் நம் உடலுக்கு மிகப்பெரும் பயனை அளிக்கும்.

இப்பழத்தில் நிறைந்துள்ள நன்மைகள் என்னவென்று பார்ப்போம்:

நார்த்தம்பழம் மிக அதிகப் புளிப்பு சுவை கொண்டது என்பதால் நாம் பெரும்பாலும் இந்த பழத்தை சாப்பிடுவதில்லை. நார்த்தங்காய் சாதம் செய்யவும், ஊறுகாய் செய்யவும் மட்டுமே பயன்படுத்துகிறோம்.

மேலும் நார்த்தம் பழத்தின் மீது சிறிது லேசாக உப்பை தூவி பழத்தை அப்படியே சாப்பிடலாம். அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம்.

இப்பழத்தில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. வைட்டமின்களும் கால்சியமும் மிக அதிக அளவில் இருப்பதால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது.

நார்த்தம்பழத்தில் ஒரு துளியளவும் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால் இவை இயல்பாகவே இதய நோய்களுக்கான ஆபத்தைத் தவிர்க்கிறது.

ஒரு நார்த்தம்பழத்தை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்வது சிறந்துது. இது எலும்பு மற்றும் பற்கள் உடம்பில் பெருமளவுக்கு உதவுகிறது.

மேலும் தசை உருவாக்கம் மற்றும் தசை இயக்கங்களை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. நார்த்தம்பழம் இதில் வைட்டமின் சி மட்டுமல்லாமல் புரோட்டீன்களும் அதிக அளவில் கிடைக்கின்றன.

உயிரணுக்களின் உற்பத்தியிலும் உயிரணுக்களை வளமுடையாக ஆக்குவதிலும் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. ஆண்மைத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது

உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவு மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்கிறது.

நார்த்தம்பழம் சிறுநீரக கல் உருவாவதை தடுக்கிறது. பொதுவாக சிறுநீரகக் கல் வந்தபின் வாழைத்தண்டை அரைத்துக் குடித்துக் கொண்டிருப்போம்.

ஆனால் நார்த்தம்பழமோ எவ்வளவு வேகமாக சிறுநீரகக் கல்லை கரைக்க முடியுமோ அவ்வளவு வேகமாகக் கரைத்துவிடும். சிறுநீரகக் கல் உருவாகாமல் பார்த்துக் கொள்ளும்.

வைட்டமின் பி அதிக அளவில் நார்த்தம்பழத்தில் இருப்பதால் இது வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது.

இந்த நார்த்தம்பழத்தில் பொதுவாகவே கலோரிகள் மிக குறைவாக இருப்பதால் உடல் பருமனாவதை தடுக்க உதவுகிறது.

இந்த பழங்களில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் உடலில் தேவையற்ற உயிர் அணுக்களை அழித்து சிறந்த ஆக்சிஜனேற்ற செயல்பாட்டிற்கு துணை புரிகிறது.

ஒரு மீடியம் சைஸ் நார்த்தம்பழத்தில் கிட்டதட்ட 45 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. இதில் ஒரு கிராம் அளவுக்கு புரதம் நமக்குக் கிடைக்கின்றது.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம். இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம்.

நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்.

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்.

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *