Breaking News

நெல்லிக்கனியின் அற்புத மருத்துவ தகவல்கள்!! அவசியம் படியுங்கள்!

நெல்லிக்கனியை அரைத்து அதில் குங்குமப்பூ மற்றும் ரோஜா நீர் இரண்டையும் நன்கு கலந்து குடித்து வந்தால் தலைவலி மற்றும் மூலநோய் நீங்கும்.

நெல்லிக்கனியின் சாற்றில் தேன் மற்றும் திப்பிலிப் பொடி இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுவாசகாசம் விரைவில் குணமாகும்.

மேலும் நெல்லிக்கனியின் சாறை குடித்து வந்தால் நுரையீரல் பெருக்கம் மற்றும் குடல் புழுக்கள் அழிந்து விடும்.
தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் இதயக் கோளாறு சம்மந்தமான பிரச்சனைக்ள தீரும்.

அதுமட்டுமல்லாமல் தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வருவதால் நரம்புத் தளர்ச்சி மற்றும் தோல் சுருக்கம் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும்.

நெல்லிக் கனியின் சாற்றினை சிறிதளவு பாலில் கலந்து சாப்பிட்டு வருவதால் கீல்வாதம், நரம்புத் தளர்ச்சிஆகிய பிரச்சனைகள் குணமாகும்.

நெல்லிகாயை உலர்த்தி பொடியாக்கி நம் உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கும்.

உலர்ந்த நெல்லிக்காயை நீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரில் கண்களைக் கழுவி வந்தால் கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.

நெல்லிக் கனியை நன்கு பொடிசெய்து அதில் தேன் அல்லது நெய் கலந்து இரவில் உண்டு வருவதால் கண்பார்வை மங்குதல் போன்றவை குணமாகும்.

மேலும் நெல்லிக் கனியை நன்கு அரைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் சளி, தலைபாரம் மற்றும் தலைவலி சரியாகும்.

நெல்லிக்கனியின் சாறில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் தும்மல் விரைவில் குணமடையும்.

தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் பயோரியா நோய், ஸ்கர்வி நோய் குணமாகும். அதுமட்டுமல்லாமல் பற்களில் உள்ள கிருமிகள் நீங்கும்.

மேலும் இதில் நெல்லிகாய் விதையை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.

மேலும் பாம்பு, தேள் மற்றும் வண்டுகள் கடித்தால் நஞ்சுகள் நீங்க நெல்லிச் சாறுடன் வாழைப்பட்டை சாறு கலந்து குடித்து வந்தால் நஞ்சு நீங்கி விடும்.

நெல்லி பூவை நன்கு மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் குணமாகுவதோடு உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். நெல்லிக்காய், நெல்லிப்பழம் இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் இருக்கும்.

நெல்லி மரத்தின் இலை கொழுந்தை நன்கு அரைத்து அதை மோரில் கலந்து குடித்து வந்தால் சீதத்துடன் கூடிய கழிச்சல் குணமாகும்.

மேலும் நெல்லிவற்றல் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் பித்தம் மற்றும் வாந்தி நிற்கும்.

நெல்லிக்காயை துவையலாக செய்து சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி சுவையை உண்டாக்கச் செய்யும்.

நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வருவதால் தலையில் முடி நன்கு வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை மறையும்.

மேலும் நெல்லிக்கனியின் என்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம் என்று நெல்லிக்கனியைச் சொல்லுவது முற்றிலும் பொருந்தும்.

நெல்லிக்காயின் பல விதமான நன்மைகள் ஏற்படுகின்றன. இவை அனைவருக்கும் பொதுவாகத் தெரிந்தது ஒன்று எனவே நீங்கள் நெல்லிக்கனியை சாப்பிட மறக்காதீர்கள்.

About kalaiselvi

Check Also

உங்கள் ஆண்மை ஆரோக்கியமாக உள்ளதா? என தெரிந்துகொள்ள வேண்டுமா?.. ஒரு டம்ளர் நீர் போதும்!

ஆரோக்கியமான வி ந் து எண்ணிக்கை என்பது ஒரு ஆரோக்கியமான நிலை மற்றும் குழந்தைக்கு தந்தையாவதற்கான அறிகுறியாகும். இன்றைய காலக்கட்டத்தில், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *