Breaking News

தந்தை இறுதி ஊர்வலத்திலேயே அர சியலாம்!! தொண்டமானின் மகனுக்கு எ ச்சரிக் கை விடுத்த ஜ னாதிபதி

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் மகனால் நடத்தப்படும் அ ரசியல் பி ரசாரங்களை நி றுத்தச் சொல்லி ஜ னாதிபதி கோ ட்டாபய ரா ஜபக்ஷ உத் தரவிட்டுள்ளார்.

சில புகைப்படங்களைப் பார்த்த சுகாதார அதிகாரிகள் இதனை ஜ னாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில், அதிருப்தியடைந்த ஜ னாதிபதி இவற்றை உடனடியாக நி றுத்துமாறு, உடனடியாக ஊ ரடங்குச் ச ட்டத்தை அ முல்படுத்துமாறும் உ த்தரவிட்டுள்ளதாக ஜ னாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் இருந்து அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பூதவுடல் வேவல்டனிற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு பெருந்திரளான மக்கள் கூடியதுடன், பேரணியாக எடுத்துச் சென்றபோது ஊடகங்களில் வெளியாகிய புகைப்படங்களின் பின்னர், நிலைமையை அவதானித்த ஜ னாதிபதி, கோபம் கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக ஜ னாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்திற்கும் முன்னதாக மக்கள் நலனே தனக்கு முக்கியமானது என இதன்போது ஜ னாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆறுமுகன் தொண்டனின் மரண ஊர்வலங்களின் போது அவரின் மகன் ஜீவன் தொண்டமான் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் செயற்படுவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமரர் அமைச்சர் ஆறுமுகம் தொண்டாமானின் மகன் ஜீவன் தொண்டமான் தேர்தல் சட்டங்களையும் தனிமைப்படுத்தல் சட்டங்களையும் மீ றியுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் வ ன்முறை களை கண் காணிப்பதற்கான நிலையம் தேர்தல் ஆணைக்குழுவும் பொலிஸாரும் இது குறித்து அல ட்சியமாக யிருப்பதாகவும் மௌனம் சாதிப்பதாகவும் கு ற்றம் சாட்டியுள்ளது.

ஜீவன் தொண்டமான் நுவரேலியாவில் தனது தந்தையின் பூதவுடல் ஏற்றப்பட்ட வாகனத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டமை தேர்தல் வி திமுறை களை மீ றும் செயல் என சிஎம்ஈவியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில்,அர சியல் கட்சிகளும் அரசி யல்வாதிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறான நடவடிக்கைகளை கண்காணித்து தடுக்கவேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட் டம் நடைமுறையில் உள்ளது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன, சமூக விலக்கல் முக்கிய விடயமாக உள்ளது என தெரிவித்துள்ள அவர் இதனை நடைமுறைப்படுத்துவது காவல்துறையினரின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த விடயத்தில் தேர்தல் ஆணைக்குழுவும் காவல்துறையினரும் உரிய நடவடிக்கைகளை எடுக்காததை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான சிஎம்ஈவி எதிர்க்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை இறுதி ஊர்வலத்திலேயே அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கும் ஜீவன் தொண்டமானின் அரசியல் எதிர்காலம் இப்பவே பிரகாசமாக தெரிகின்றது.மலையக நாள்கூலி மக்களின் துன்பங்கள் தீர்வது கேள்விகுறிதான்.

இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பா துகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று (30.05.2020) முற்பகல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

கொழும்பில் இருந்து ஹெலிகொப்டரில் எடுத்து வரபட்ட அன்னாரின் பூதலுடல் நேற்று (29.05.2020) வேவண்டன் இல்லத்தில் வைக்கப்பட்டது. மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டு நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சர்வமத வழிபாடும், இந்து மத முறையிலான கிரியைகளும் இடம்பெற்றன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜ னாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதந்து அஞ்சலி செலுத்தினார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொலிஸாரும், இரா ணுவத்தினரும் குவி க்கப்பட்டுள்ளனர். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதலுடல் தாங்கிய பேழையுடன் நான்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

ரம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுகலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சிஎல்எப் வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இடையில் எங்கும் வாகனம் நிறுத்தப்படவில்லை.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நாளை மாலை 4 மணிக்கு நோர்வூட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *