Breaking News

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த விசேட கலந்துரையாடல் நாளை மறுதினம் 26 ஆம் திகதி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் கல்வி அமைச்சில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

இதன் போது பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் செய்து கொடுக்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கை கழுவுதற்கான ஏற்பாடுகள்,மற்றும் திடீரென மாணவர்களுக்கு சுகவீனம் அல்லது உடல் உஷ்னம் அதிகரித்தல் போன்றன ஏற்பட்டால் அந்த மாணவர்களுக்கான முதலுதவியை வழங்குவதற்கான கட்டிலுடன் கூடிய அறை வசதிகள் உள்ளிட்ட மூன்று விடயங்களில் பிரதானமாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தியிருப்பதுடன் இவற்றுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் சுமார் 200 மாணவர்கள் அல்லது அதற்கு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு இந்த மூன்று வசதிகளையும் ஏற்படுத்துக் கொடுப்பதற்காக 30 ஆயிரம் ரூபா நிதியை ஒதுக்குவதற்கு கணிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைக்காக 10 ஆயிரம் ரூபாய் வரையாகும். 300 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு இதுபோன்ற இரண்டு கைகழுவும் தொட்டிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதுடன் 1000 ஐ விட அதிக மாணவர்களைக் கொண்ட பாடசாலைக்கு 20 கை கழுவும் தொட்டிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம். இவற்றுக்கான செலவாக 680 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணிப்பிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதோடு மாணவர்களின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானியும் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *