Breaking News

விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ள 276 பேர்

கொரோனா காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் பங்களாதேஷில் சிக்கித்தவித்த 276 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் குறித்த 276 பேரும் பங்களாதேஷிலிருந்து அழைத்துவரைப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 1.50 மணியளவில் குறித்த விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

மேலும் நாடு திரும்பிய அனைவரையும் தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *