Breaking News

விமானப் படையின் அம்புலன் மோதி கோர விபத்து!! குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி: மனைவி படுகாயம்

பளைப் பகுதியில் இன்று காலை விமானப்படையின் அம்புலன்ஸ் வாகனம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று அங்குள்ள எமது 110News செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

பளை – தம்பகாமம் சந்தி ஏ-9 வீதிக்கு குறித்த குடும்பஸ்தரும் குடும்பத் அவருடைய மனைவியும் வந்து ஏறிய போது, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த அம்புலன்ஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது

இன்று காலை பளையில் நடந்த விபத்தில் அகால மரணமடைந்த யாழ் போதனா வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர் அமரர் அந்தோணி அஞ்சலஸ் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றோம்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *