Breaking News

Breaking news – யாழில் கூண்டோடு தனிமைப்படுத்தப்பட்ட முன்னணியின் பிரமுகர்கள்!! முள்ளி வாய்க்காலிலும் கெடுபிடி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் அனைவரும் கூண்டோடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிசார் இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வந்த அஞ்சலி நிகழ்வுகளின் எதிரொலியாக இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றமசுமத்தியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஸ், வரதராஜா பார்த்தீபன் உள்ளிட்ட 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கான கட்டளைகளை யாழ்ப்பாண பொலிசார், இன்று அவர்களின் வசிப்பிடங்களில் சமர்ப்பித்தனர்.

அஞ்சலி நிகழ்வுகளில் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதும், இன்று அஞ்சலி நிகழ்வை தடை செய்ய கோரியும் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மனு தாக்கல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணியில் முன்னணியினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதேவைளை, முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை அனுஸ்ரிக்கப்படவுள்ள நிலையில் அதனை குழப்பும் வகையில் குறித்த பகுதியில் புதித பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் காவலரண்களை அமைத்துள்ளனர்.

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்குச் செல்லும் வீதியின் ஆரம்பத்தில், பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைச் சாவடியில் கடந்த 3 நாள்களாகச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன், நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அண்மையாகவுள்ள ஆள்களில்லாத வீடு ஒன்றில் புலனாய்வாளர்கள் தங்கியிருந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு வருபவர்களை இவர்கள் கண்காணிப்பதுடன், ஒளிப்படம் எடுத்து, அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.

அத்துடன், முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் தொடக்கமான, இரட்டைவாய்க்கால் பகுதியிலும், இராணுவச் சோதனைசாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைச் சாவடியில் உள்ள படையினர், வீதியால் செல்பவர்களைப் பதிவு செய்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வட்டுவாகல் பாலத்துக்கு முன்பாக வழமைக்கு மாறாக அளவுக்கதிகமான படையினர் நிறுத்தப்பட்டு சோதனைச் சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை, முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையை நினைவு கூரும், நினைவேந்தல் நிகழ்வு கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என நினைவேந்தல் குழு அறிவித்துள்ள நிலையில், இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகள் அப்பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ளன

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *