Breaking News

இன்றைய விபத்துக்களின் தொகுப்பு

வவுனியா புகையிரதநிலைய வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 3.45 மணியளவில் குருமன்காடு சந்தியிலிருந்து புகையிரத நிலையம் நோக்கி பயணித்து மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே பயணித்த பார ஊர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன் அதே திசையில் பயணித்த கெப் வண்டியுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா குட்செட் வீதியை சேர்ந்த 39 வயதுடைய பாலன், கனேசபுரத்தை சேர்ந்த 39 வயதுடைய கிறிஸ்ரி ஆகிய இரண்டு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்தை நேரடியாக கண்ட சிலர் எமக்கு கருத்து தெரிவிக்கையில் குருமன்காடு சந்தியில் நின்ற போக்குவரத்து பொலிஸாரும் ஒருவர் குறித்த மோட்டார் சைக்கிளை துரத்தி வந்ததாகவும் அதனாலேயே வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து உண்டானது என்றும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.facebook.com/110Nws/videos/261780104972810/

இதேவேளை, கடற்படையினரின் பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு வவுனியா கனகராயன்குளம் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளன.

கடற்படையினரை ஏற்றி சென்ற பேருந்து ஒன்றுடனே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கனகராயன்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ் விபத்துச் சம்பவத்தில் கடற்படையினரின் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்துள்ளதுடன் பட்டா ரக வானத்தின் முன்பகுதியும் லொறியின் முன்பகுதியில் சிறிய இடமும் சேதமடைந்துள்ளதுடன் எவ்வித உயிராபத்துகளும் இடம்பெறவில்லை.

இதேவேளை, மட்டக்களப்பு நகரில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய (ரயில்நிலைய) சந்தியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியால் சென்ற ஒருவரை வாகனம் ஒன்று மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் குறித்த நபரை மோதிய வாகனம் அடையாளம் காணப்படவில்லையெனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பார்வீதியின் குறுக்கு வீதியான திருக்குறிப்புதொண்டர் வீதியை சேர்ந்த 45 வயதுடைய த.அமுதன் என்பவரே படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேவேளை, யாழில் மதுபோதையில் காரினை செலுத்தி வந்த நபர் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

நிறை மது போதையில் காரினை செலுத்தி வந்த நபர் ஒருவர், வெலிங்கடன் சந்திக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைக்கிள்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்கள் என்பவற்றுடன் மோதி விபத்து உள்ளாகியுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னேடுதத்துடன் மதுபோதையில் காரை செலுத்தியவரை கைது செய்ததுடன் காரையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

நீண்ட காலத்திற்கு பின்னர் நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டதனையடுத்து மதுபோதையில் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அங்காங்கே நடைபெற்று வருகின்றன.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *