Breaking News

திவுலப்பிட்டியவில் மேலும் ஒருவருக்கு கொரோனா

கம்பஹா, திவுலப்பிட்டிய பகுதியில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட 39 வயதுடைய பெண்ணின் 16 வயதுடைய மகளிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலமே அவர் கொரோனா கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை திவுலப்பிட்டிய பகுதியில் 600 க்கு மேற்பட்டவர்களும், மினுவாங்கொடை பகுதியில் 250 க்கும் மேற்பட்டவர்களும் இதுவரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டள்ளனர்.

அதேநேரம் கம்பஹாவில் காய்ச்சில் அறிகுறிகளை கொண்டவர்கள் அருகில் உளள் வைத்தியசாலையில் பி.சி.ஆர். சோதனைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *