Breaking News

புலிகள் புதைத்த பச்சைப்பெட்டி மீட்பு!

புதுக்குடியிருப்பு, கைவேலிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் நேற்று (11) மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கைவேலிப்பகுதியில் காணி ஒன்றில் நிலத்தினை தோண்டும் போது நிலத்தில் புதைக்கப்பட்ட பெட்டி ஒன்று காணப்பட்டுள்ளது.

குறித்த பெட்டி பச்சைப்பெட்டியாக காணப்படுவதால் இது தொடர்பில் நிலத்தின் உரிமையாளர் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிசார் அப்பெட்டியினை எடுத்து பார்த்தபோது விடுதலைப்புலிகளின் சீருடைகள் உள்ளிட்ட ஆவணங்கள் சில காணப்பட்டுள்ளன.

இதன்போது விடுதலைப்புலிகளின் நான்கு சீருடைகளும் அவற்றுக்கான தொப்பிகளுடன் பெண்போராளிகள் பயன்படுத்தும் இடுப்பு பட்டி மற்றும் சிவில் உடைகள் சிலவற்றுடன் ஒளிப்பட நாடா கெசட், ஒலி நாடா கெசட் ஒன்று, நான்கு அல்பங்கள் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

யுத்த காலத்தின்போது விடுதலைப்புலிகளால் இவை புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

பொலிசாரால் மீட்கப்பட்ட அனைத்து பொருட்களும் இன்று (12) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *