Breaking News

பொலிசார் மீது தாக்குதல்!! யாழில் சொந்த காணியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த 22 பேர் கைது!

வடமராட்சி கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தமது பூர்வீக சொந்த நிலங்களில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் இருபத்து இரண்டு பேர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வடமராட்சி கிழக்கின் கட்டைக்காடு பச்சிலைப்பள்ளியின் இயக்கச்சி உட்பட்ட பகுதிகளில் நெற் செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காணிகள் வனஜீவராஜிகள் திணைக்களத்திற்கு சொந்தமானவை என்று குற்றம்சாட்டியே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இருந்தபோதிலும் நீண்டகாலமாக தாம் தொடர்ந்தும் அந்தப் பகுதிகளில் நெற் செய்கையில் ஈடுபட்டுவருவதாகவும் குறித்த காணிகளுக்கான உறுதிகள் தம்மிடம் உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த போதிலும் அதனைச் செவிமடுக்காமலேயே கைது இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.

சம்பவத்தின் பின்னணி,

இருதரப்புகளுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பைத் தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் காயமடைந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பருத்தித்துறை நகரில் இன்று மாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெறுவதாக பருத்தித்துறை நகர் பகுதியிலிருந்து தகவல் கிடைத்தது. அதுதொடர்பில் விசாரிப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் அங்கு சென்றிருந்தனர்.

அங்கு மோதலில் ஈடுபட்ட ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மண்வெட்டிப் பிடியால் தாக்கியுள்ளனர்.

அதனால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடுங்காயங்களுக்கு உள்ளாகி நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பருத்தித்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *