Breaking News

கசிப்பினால் ஏற்பட்ட விபரீதம்: கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

நோட்டன்பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா

பின்னவலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மாரத்தென்ன பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நபர் ஒருவர் பலியானதுடன் மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரையும் கைது செய்துள்ளதாக பின்னவல பொலிஸார் தெரிவித்தனர்

பின்னவலை பம்புகொலை கீழ்ப்பிரிவை சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான வேலுகுமார் ராஜ் என்பவரே இவ்வாறு பலியானார்

சம்பவம் தொடர்பில் தெரியருவகையில்,

பம்புகொலை கீழ்பிரிவு தோட்டத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியே கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதுன் மோதலில் ஈடுபட்ட இருவரும் அந்த நேரம் கசிப்பு அருந்தியிருந்ததாக பின்னவல பொலிஸார் தெரிவித்தனர்

உயிரிழந்தவரின் சடலத்தை பலாங்கொடை நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் டி.எம்.சந்ரசேகர பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மாரத்தென்ன வைத்தியசாலையில் இருந்து பலாங்கொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேலை கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பலாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பின்னவல பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *