Breaking News

தனுரொக்கின் நண்பராம்!! யாழில் தாய், மகன்மீது சரமாரியாக வாள்வெட்டு!!

நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடு ஒன்றிற்குள்  புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் ஒருவர் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வன்முறைச் சம்பவம் இன்று (செப்.30) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பு.சிவா (வயது -30) அவரது தாயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர் மீதே வீடு புகுந்து இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வன்முறைக் கும்பல் வாள்கள், கம்பிகள் கொண்டே தாக்குதலை நடத்தியுள்ளது.

வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியும் தீயிட்டு எரித்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளது.

கோப்பாய் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ‘ஆவா’ வினோதன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்தார்.

அவரை வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதி – பெருமாள் கோவிலடியில் வைத்து கடந்த 26ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கார் ஒன்றில் வந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிளில் சென்ற தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த தனுரொக், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தனுரொக் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொக்குவிலைச் சேர்ந்த மோகன் அசோக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அத்தோடு மேலும் மூவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், காரின் உரிமையாளரை அழைத்து வாக்குமூலம் பெற்ற பொலிஸார், அவரை விடுவித்திருந்தனர்.

கொலை முயற்சி சந்தேக நபர்கள் நால்வர் மீதும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் நால்வரும் வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் தனுரொக்கின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இணுவிலைச் சேர்ந்த ‘ஆவா’ என்று பொலிஸாரால் அழைக்கப்படும் வினோதன் தேடப்பட்டு வந்தார்.

அவர் இன்று தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார். அவரையும் வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *