Breaking News

கணவர் தொல்லை!?? யாழில் விபரீத முடிவெடுத்து பலியான பெண்!!

யாழில் இளம் தாயார் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

யாழ் அரியாலை பகுதியில் நேற்று (25) இரவு இந்த சம்பவம் நடந்தது.

பிரதீபா டில்ஷான் (31) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

நேற்றிரவு தம்பதியர்களிற்கிடையில் தர்க்கம் உருவாகியதாகவும், பின்னர் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டதையடுத்து, அவரது கணவர் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னரே, எதையும் உறுதியாக தெரிவிக்கலாமென பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை  யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *