Breaking News

யாழில் துண்டான இரண்டு கைகளையும் பொருத்திய வைத்தியர்

வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக இரண்டு கைகளும் துண்டாடப்பட்ட நிலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட சத்திர சிகிச்சையின் ஊடாக அவரது கைகள் காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்த சத்திரச்சிகிச்சைக்கு யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியபல்லவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், முழுமையான பங்களிப்பினை வழங்கினர் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இரண்டு கைகளும் துண்டாடப்பட்ட ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டி சத்திரசிகிச்சை  மேற்கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றையதினம் கருத்து தெரிவிக்கும் போதே மருத்துவர் த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் இடது கை முற்றாகவும், வலது கை பகுதியாகவும் துண்டாடப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 12 மணித்தியாலங்களிற்கும் மேலாக தொடர் சத்திரச்சிகிச்சை மேற்கொண்டனர்.

இந்தச் சத்திரச்சிகிச்சை வெற்றியளித்ததன் காரணமாக கிளிநொச்சி வாசியின் துண்டாடப்பட்ட கைகள் நல்ல நிலைக்கு கொண்டு வரப்பட்டு அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகள், மனைவியுடன் நாளாந்த தொழிலினை மேற்கொண்டுவரும் குறித்த நபரிற்கு நேர்ந்த அனர்த்தத்தினால் அவரது குடும்பம் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட இருந்த நிலையில் குறித்த வைத்திய நிபுணரால் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையால் அது தடுக்கப்பட்டுள்ளதோடு, வாள்வெட்டுக்கள் மலிந்த யாழ் குடாநாட்டில் நாளாந்தம் இதுபோன்ற பல சத்திரசிகிச்சைகள் குறித்த வைத்திய நிபுணரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சில மாதங்களின் பின்னர் அவரது கைது பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்,
பொதுமக்கள் கைகள்,கால் துண்டாகுதல் தொடர்பாக விழிப்புணர்வு அடையவேண்டும் எனவும், வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றால் இவ்வாறான அப்பாவிகளிற்கு சிகிச்சைகள் வழங்கமுடியாது போகக்கூடும் என்றும் தெரிவித்தார்.

https://www.facebook.com/thjaffnanews/videos/344588336974788/

இது பல சிக்கலான சிகிச்சைமுறை என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும்  என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *