Breaking News

16 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த மிகுதி 4 பேருக்கும் தொற்றில்லை..!

சுவிஸ் போதகருடன் 5 நாட்கள் நெருக்கமாக பழகிய நிலையில் பலாலி தனிமைப்படு த்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 20 போில் 16 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மிகுதி 4 பேருக்கு தொற்றிலிருந்து தப்பியுள்ளனர்.

இன்றைய தினம் குறித்த 4 பேருக்கும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள வர்களுக்கு உணவு வழங்கிய 4 இராணுவத்தினருக்குமாக 8 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் 8 பேருக்கும் தொற்றில்லை. என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதனை மாகாண சுகாதார பணிப்பாளர் மருத் துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் இன்று கொரேனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 23 போில் ஒரு வருக்கும் கொரோனா தொற்று இல்லை. என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர், யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பை சேர்ந்த 4 பேர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 8 பேர், தெல்லிப்பளை சுகாதார பிரிவுக்குட்பட்ட 8 பேர் என 27 பேர் பரிசோதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் எவருக்கும் தொற்றுள்ளில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *