Breaking News

LOLC நிறுவனம் மனுஷதெரணவுடன் இணைந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பு

இன்றையதினம் (23) LOLC நிறுவனம் மனுஷதெரணவுடன் இணைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தியிடம் கொரோனா  பராமரிப்பு தொடர்பான பெறுமதியான சுகாதார பராமரிப்பு பொருட்களை LOLC யாழ்கிளை சிரேஷ்ட முகாமையாளர் திரு.V.R.சுதாகரன் மற்றும் சீலன் -நெல்லியடி கிளை முகாமையளார், சசிகரன்-முகாமையளார் சுண்ணாகம்  அவர்களால் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பாதகமான சூழ்நிலை காரணமாக பல கஷ்டங்களை சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதில் LOLC ஆகிய நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

கொரோனா வைரஸ் நம் ஒவ்வொருவரையும் பாதித்துள்ளது. இந்த முக்கியமான கட்டத்தில், மனிதாபிமானமுள்ள ஒரு நிறுவனமாக எல்.ஓ.எல்.சி தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு மனுச தெரனாவுடன் கைகோர்த்து நாடுமுழுவதும் இதுபோன்ற தனது சேவைகளை வழங்கிவருகிறது .

இவ்வாறான முயற்சிகளை LOLC மேற்கொள்வது இது முதல் முறை அல்ல. உதவி தேவைப்படுபவர்களை நாங்கள் எப்போதும் சென்று அடைவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *