Breaking News

பொலிசாரின் எச்சரிக்கைகளையும் மீறி ஆதரவு வளங்கிய தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள்

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மீது அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு யாழ் மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்டம், வவுனியாவிலும் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா பசார் வீதிக்கு இன்றையதினம் காலை சென்ற வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்ததுடன் சில வர்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளை திறக்குமாறு கட்டளையிட்டனர்.

இதனால் குறித்த பகுதியில் குழப்பமான நிலமை ஒன்று ஏற்பட்டிருந்தது.

எனினும் பொலிசார் கட்டளையிட்டபோதும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடைகளை திறக்காமல் கடையடைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

முழுமையான ஹர்தாலுக்கு ஆதரவு வழங்கி முடங்கிய வவுனியா

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *