Breaking News

இன்று மட்டும் 24 பேர்!! நாளை நடக்கப்போவது என்ன?

இன்றுமட்டும் கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 24 பேர்   (ஏப்ரல் 20) திங்கட்கிழமை காலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 24 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 295ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 17 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று 24 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

96 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

192 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுள்ள ஒருவருடன் அரை மணித்தியாலங்கள் மட்டுமே உரையாடிய ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று ஒருமாதம் கழிந்தும் வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ளபோது யாழில் இருந்து கண்டிக்கு அரச பேருந்தில் சன நெரிச்சலுடன் போக்குவரத்து ஏற்பாடு வெற்றிகரமாக நடைபெறுகின்றது.

இத்தோடு நிற்காமல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களும் வெறும் காய்ச்சல் பார்க்கும் கருவியை கொண்டு பரிசோதித்த பின்னர் உட்செல்ல அனுமதிக்கப்பட்ட சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

மதுபானம் வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் குடிமகன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *