Breaking News

உணர்வுகளிற்கு மதிப்பு கொடுத்து முற்றாக முடங்கிய யாழ் குடாநாடு!!

ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் அழைப்பில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் முழுக் கடையடைப்பிற்கு அமைய யாழ் குடாநாடு முற்றாக முடங்கியுள்ளது.

யாழ்ப்பாணம், 5சந்தி பகுதி, பருத்தித்துறை மாநகரம், சுன்னாகம், இன்னும் பல பிரதேசங்கள் முற்றாக முடங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மதுபான விற்பனையாளர்களும் முற்றாக மூடி தமது ஆதரவை வளங்கியுள்ளனர்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் முடங்கியுள்ளன.



அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் முழுக் கடையடைப்புக்கு 10 தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த அழைப்பிற்கு இன மத பேதமின்றி தமிழ் பேசும் அனைத்து மக்களும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *