Breaking News

கஞ்சா, கசிப்பு விற்பவனை ஓடவிட்டு, தேன் விற்றவர்களை பிடித்து போட்டோ எடுத்த அதிகாரிகள்

மன்னார்- மடு மாதா தேவாலயத்திற்கு செல்லும் பாதையில் போலி தேன் விற்பனையில் ஈடுபட்டிருந்த 5 குழுக்களை மடக்கிய பிடித்த சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் மனிதாபிமான அடிப்படையில் எச்சரித்த பின் மன்னிப்பு வழங்கியுள்ளனர்.

குறித்த பகுதியில் சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என 5 குழுக்களாக பிரிந்து இவ்வாறு போலி தேன் விற்பனையில் ஈடுபட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

இவர்கள் வவுனியா மெனிக்பாம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், கோதுமை மா, சிற்றிக் அசிட், சீனி மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து காய்ச்சி இந்த போலியான தேனை தயாரித்துள்ளதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களது வயது மற்றும் பொருளாதார நிலமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு எச்சரித்து மன்னிப்பு வழங்கிய பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள், போலி தேன் போத்தல்களை பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.

குறிப்பு:- அப்படியே அந்த கசிப்பு காச்சி விக்கிறவயளிண்ட போட்டோகளயும் பிடிச்சவுடன பேஸ்புக்கில போடுங்கேவேன் ஆபிசர்ஸ்.

கஞ்சாவோட பிடிபட்டவன், அபினோட பிடிபட்டவனை எல்லாம் விட்டுபோட்டு, வயிற்று பசிக்கு போலி தேன் விற்றவனை பிடிச்சு பெஸ்புக்கில போடுறியள். இந்த இளைஞர்களிற்கு போதுமான தொழில் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காதது யாருடைய தவறு.

குடி வெறிக்காக அவர்கள் ஏமாற்றவில்லை. வயிற்று பசிக்காகவே இவ்வாறான செயலை செய்து வருகின்றார்கள். நாம் அவர்கள் செய்தது சரி என வாதாட வரவில்லை.

பறித்து ஊற்றினீர்கள் சரி, நாளை அவர்கள் இது போல தவறை மீண்டும் செய்யாதிருக்க என்ன செய்தீர்கள் என ஒரு சமூக பொறுப்புள்ளவர்களாக உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

இப்படிக்கு திரு பொதுசனம்

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *