Breaking News

யாழில் ஊரடங்கை நீக்குதல் சாத்தியமில்லை

கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொண்டு இடர் வலயங்களாக அரசால் பிரகடனப்படுத்துள்ள 6 மாவட்டங்களின் ஒன்றான யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் பிரதிநிதியாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

இன்று காலை 8.30 மணிக்கு விமானம் மூலம் பலாலிக்கு வந்தடைந்த அவருடன் விமானப் படைத் தளபர் எயார் மார்சல் சுமங்கல டயஸூம் வருகை தந்துள்ளார்.

பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தில் பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் ஆரம்பமான கூட்டத்தில் முப்படைகளின் கட்டளைத் தளபதிகள், வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

அங்கு தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன யாழில் தெரிவித்தார்

வடக்கிலுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு ஆகிய எங்களிடம் உள்ளது எனவே கொழும்பைப் போல தொற்று அதிகம் உள்ள இடமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது எனவே தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்

மேலும் யாழ்ப்பாண மக்களுக்கு நான் இரண்டு கோரிக்கைகளை முன் வைப்பதாக பதப் அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்

ஒன்று ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள்

மற்றையது உண்மையை பேசுங்கள் ஏனெனில் நாங்கள் உங்களுக்காக சேவையாற்ற தயாராக இருக்கின்றோம் எனினும் நீங்கள் உண்மையைக் கூறாது விட்டால் நாம் எந்த வித செயற்பாட்டையும் ஈடுபட முடியாது

எனவே வடக்கில் உள்ள மக்களிடம் நான் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *