Breaking News

யாழில் மீண்டும் இனம்காணப்பட்ட கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்றைய பரிசோதனையில் இரு இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த 8 பேரில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்

இன்று 24 பேருக்கான கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.

ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர்.

ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்.

8 பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியை சேர்ந்த தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள்.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 15ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இவர்களுக்கு கோரோனா உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆராதனை நடத்திய சுவிஸ் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி தங்கவைக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவருக்கும் கடந்த ஏப்ரல் முதலாம், மூன்றாம் திகதிகளில் முதல்கட்டப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது மானிப்பாயைச் சேர்ந்த போதகர் ஒருவர் உள்பட 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *