Breaking News

யாழில் வீடு புகுந்து கொள்ளையிட்ட சிறுவன்!! நகைகளை வாங்கி அடைவு வைத்த இளைஞன்

யாழ்ப்பாணம்- குருநகரில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிட்ட 17 வயது சிறுவன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் நகைகளை வாங்கி அடகு வைத்த ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், கொள்ளையடித்த நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் இருந்தவர்கள் வேலைக்குச் சென்றிருந்த வேளை, வீடுடைத்து நகைகள் கொள்ளையிடப்பட்டன.

இந்நிலையில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே திருநகரைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் பொலிஸாரால் நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்துக் கொடுத்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் இன்று முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *