Breaking News

யாழில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானம் விற்பனை செய்தவர் மடக்கி பிடிப்பு

யாழ்ப்பாணம் கன்னாதிட்டிப் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து 78 போத்தல்கள் (கால் போத்தல் அளவுடைய) மதுபானம் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழுள்ள சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போதைத் தடுப்புப் பொலிஸாருடன் இணைந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் கோரோனா வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபான சாலைகளை காலவரையறையின்றி மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டத்துக்கு புறம்பாகவும் அதிக விலையிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *