Breaking News

யாழில் பரி தாபமாய் ப றிபோன இ ளைஞன் உ யிர்!! நடந்தது என்ன??

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தினைச் சேர்ந்த சிறுநீரகம் செயலிழந்த நோயாளியை நோயாளர் காவு வண்டியில் அழைத்துவருவதில் தாமதம் ஏற்பட்டதில் அனாவசியமான உயி ரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சமகால நிலைப்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்..

ஊரடங்கு நடைமுறையில் இருந்த வேளையில் வட்டுக்கோட்டை பிரதேசத்தினைச் சேர்ந்த சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டிருந்த இ ளைஞன் ஒருவர் கடந்த இரு கிழமைகளிற்கு முன்னர் வாராந்த சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்துள்ளார். இவரிற்கு உரிய மருந்துகள் கொடுத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

நேற்றைய தினம் உடல்நி லை மேலும் மோ சமடைந்ததினால் நோயாளர் காவுவண்டிக்கு அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது.

நோயாளியை நோயாளர் காவு வண்டியில் அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டதில் அனாவசியமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாங்கள் விரிவான விசாரணையினை மேற்கொண்டிருந்தோம்.

இவ்வாறான நிலை ஏற்படுமாக இருந்தால் 1990 என்ற இலக்கத்துக்கு அழைத்து நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு செல்லலாம்.

அந்த இலக்தின் மூலம் உடனடியான தொடர்பினை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் 0212226666 அல்லது 0212217982 என்ற இலக்கங்களின் துணையுடன் அழைத்து யாழ்.மருத்துவ பீடத்தினரின் துணையுடன் நோயாளர்களை அழைத்துவர உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *