Breaking News

கொரோனா தொற்றுள்ளவரை கை து செய்ததால் 30 பொலிசாருக்கு நேர்ந்த க தி

பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பமுனுகம – தெலபுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சுகவீனமடைந்ததன் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பமுனுகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *